மீண்டும் படம் இயக்குவது எப்போது? – தனுஷ் விளக்கம்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஆன்லைனில் நடைபெற்றது. இதையொட்டி டுவிட்டர் ஸ்பேசஸ் வாயிலாக நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இதில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் தனுஷ், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவரிடம், இயக்குனர் தனுஷை மீண்டும் எப்போது பார்க்கலாம் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தனுஷ், “இன்னும் சில ஆண்டுகளுக்கு திறமையான இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது. அதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இயக்குனர் தனுஷை பார்க்க முடியாது” என்று தெரிவித்தார். நடிகர் தனுஷ் ஏற்கனவே பா.பாண்டி என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.