வவுனியாவில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு சென்ற பேருந்துக்கு நேர்ந்த விபரீதம்!

வவுனியாவில் தனிமைப்படுத்தலுக்கு மக்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது. குறித்த பேருந்தில் வெளிநாடுகளில் இருந்து நாடு தி்ரும்பிய பயணிகள் சென்றுள்ளனர்.

பேருந்து கிளிநொச்சி பூநநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்குள்ளாகியது.

பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்பபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.