யாழில் இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழில் தவறுதலாக எரிகாயங்களிற்கு உள்ளான இளம் குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நல்லூரடி, கல்வியங்காட்டை சேர்ந்த சஜீவன் தர்சிகா (28) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி வீட்டில் குப்பை கூட்டி, மண்ணெண்ணெய் கொள்கலனை எடுத்துச் சென்று ஊற்றிவிட்டு குப்பைக்கு தீ வைத்துள்ளார்.

இதன்போது, தவறுதலாக அவர் மீது தீ பற்றிய நிலையில் எரிகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் , சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.