ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார மற்றும் அவரது மனைவிக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியது.
இதனையடுத்து அக்கட்சியைச் சேர்ந்த மற்றும் சஜித் பிரேமதாஸவுடன் நேரடி தொடர்பிலிருந்த 20 பேர்வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவ்வாறு தனிமையில் இருந்த நளின் பண்டார எம்.பிக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை , இலங்கை நாடாளுமன்றத்தில் இதுவரை 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.