என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்…..

உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

முன்னதாக நடந்து முடிந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் 133 இடங்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் 2.45 விழுக்காடு வாக்குகளே பெற்றது.

தேர்தல் முடிவை தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் விலகினார். அவரை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதி மநீம வேட்பாளராக ‘சென்னை தமிழச்சி’ பத்மப்ரியா, முருகானந்தம், கட்சியின் பொது செயலாளர் சி.கே.குமரவேல் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.

கட்சியிலிருந்து விலகியவர்களில் பலர் மக்கள் நீதி மய்யத்தில் சர்வாதிகாரம் போக்கு இருப்பதாக குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் சரிவுபாதையில் செல்வதாக அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.