நாட்டில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 15504 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட நிலையில் அடுத்து வரும் நாட்கள் அபாயகரமானதாக இருக்கும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து நாடு மீள்வதற்கான ஓரேவழி நாட்டை முடக்குவதுடன் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பேணவேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 538 என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய கடந்த 5 நாட்களில் மட்டும் இலங்கையில் 15504 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்.
இந்த அதிகரிப்பு வீதம் இலங்கையை பொறுத்தவரையில் மிக அபாயகரமானது எனறும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இதுவரை இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் இவற்றின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்குமெனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.







