தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் நடிகை ஜோதிகா தற்போது சோலோ ஹீரோயின் என்று பேரெடுத்துள்ளார்.
ஆம் 36 வயத்தினிலேயே, ராட்சசி, பொன்மகள் வந்தால் என பல நல்ல நல்ல படங்களை தனது நடிப்பினால் கொடுத்துள்ளார் ஜோதிகா.
இந்நிலையில் நடிகை ஜோதிகா பிரபல பாகுபலி பட ஹீரோ, நடிகர் பிரபாஸின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எப் என மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் படம் சலார்.
இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்க, படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது.
கூடிய விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சலார் படத்தை தொடர்ந்து பிரஷாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆருடன் தனது அடுத்த படத்திற்காக கைகோர்க்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








