இப்போ முகம் எப்படி இருக்கு பாருங்க.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எல்லோருக்கும் தெரிந்தவர் ரைசா வில்சன். இவர் கடந்த ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தற்போது ‘அலைஸ்’ மற்றும் ‘காதலிக்க யாருமில்லை’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த படம் விரையில் திரைக்கு வர இருக்கிறது.

மேலும், சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அவரது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் நடிகை ரைசா சரக்குக்கு ஸ்ட்ரா போட்டு குடிக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை விவாதத்திற்கு ஆளாகினார்.

சமீபத்தில் ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் அழகு நிலையத்தால் பாதிக்கப்பட்டதாக புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அதில், மிகவும் அலங்கோலமாக இருந்தார். தற்போது மீண்டு வந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.