ஈழத்து தமிழ் பெண்ணாக மாறிய சமந்தா…

பேமிலி மேன் இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா அச்சு அசலாக ஈழப்பெண் போன்று நடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற வெப் தொடரான பேமிலி மேன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மனோஜ்பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ள இதில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

மிகவும் வெறித்தனமாக நடித்திருக்கும் சமந்தா, இதில் ராஜீ என்ற கதாபத்திரத்தில் ஈழத் தமிழ்பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார்.

தீவிரவாத கும்பல்களுடன் சேர்ந்து செயல்படும் ஸ்லீப்பர் செல் ஏஜெண்டாக சமந்தா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.