எமனாக வந்த ராட்சத மரம்… நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்!

சாலையில் மரம் வேரோடு சாய்ந்து வீழ்ந்தபோது ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் காரணமாக கேரளாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் வர்கலா பகுதியில் ஒருவர் சாலையில் நடந்து சென்றபோது, எதிர்பாரதவிதமாக பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்துள்ளது.

இதை உடனே கவனித்த அவர் அங்கிருந்து வேகமாக ஓடி நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.