தமிழகத்தில் இன்று 33,181 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் மே மாதம் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று (கடந்த 24 மணிநேரத்தில்) ஒரேநாளில் 33,181 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 15,98,216 ஆக உயர்ந்துள்ளது. இன்று 311 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 17,670 ஆக உயர்ந்துள்ளது. 19,172 பேர் பூரண நலன் பெற்றதை தொடர்ந்து, மொத்த பூரண நலன் பெற்றோரின் எண்ணிக்கை 13,61,204 ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 6,247 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,38,391 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பரவலில் கோவையில் 3,166 பேருக்கும், செங்கல்பட்டில் 2,041 பேருக்கும், திருவள்ளூரில் 1,835 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 1,119 பேருக்கும், சேலத்தில் 882 பேருக்கும், மதுரையில் 1,095 பேருக்கும், திருநெல்வேலியில் 692 பேருக்கும், தூத்துக்குடியில் 914 பேருக்கும் உறுதியாகியுள்ளது.