முதல்வர் ஸ்டாலினிடம் கதறி அழுத சீமான்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று காலமானார். சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

தந்தை இறந்த செய்தி கேட்டு அரணையூர் வந்த சீமான், தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அச்சமயம் அருகில் இருந்த ஒருவர் தனது போனை சீமானிடம் கொடுத்து முதலமைச்சர் பேசுகிறார் என்றார்.

செல்போனை வாங்கி பேசிய சீமானிடம், தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

அவரிடம் துக்கம் தளாமல், கண்ணீர் விட்டு அழுது தனது சோகத்தை வெளிப்படுத்தினார் சீமான். மேலும் இந்த நேரத்தில் நீங்கள் துணையாக இருப்பது பெருமையாக இருப்பதாகவும், நம்பிக்கை கொடுப்பதாகவும் முதலமைச்சரிடம் சீமான் தெரிவித்தார்.