கொரோனாவுடன் சென்று லண்டன் O/L பரீட்சை எழுதிய மாணவனால் ஏற்பட்ட பெரும் சர்ச்சை!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதான மாணவர் ஒருவர் தனக்கு தொற்று இருப்பது அறிந்த நிலையிலும் பி.எம்.ஐ.சி.எச். இல் நடைபெற்ற லண்டன் o/l பரீட்சை  எழுதியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டாகொடையில் வசிக்கும் இவர் தனது மாமாவுடன், மோட்டார் சைக்கிளில் தேர்வு மையத்திற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மாணவனின் மாமா மீது குற்றம் சாட்டப்பட்டதாக கஹதுடுவ சுகாதார அலுவலர் தெரிவித்தார்.

இந்த மாணவனுக்கும் அவரது தந்தையுக்கும், தாய் மற்றும் சகோதரிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட போதிலும், அதை மறைத்து இதுபோன்ற முறையில் தேர்வுக்கு அமர்வது பெரிய தவறு என்றும் சுகாதாரத் துறை கூறுகிறது.

மாட்டாகொடையில் வசிக்கும் குறித்த சிறுவன், வாஸ்கடுவவில் வசிக்கும் தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் தேர்வு மையத்திற்கு வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாணவர் தேர்வுக்கு வந்த பின்னர் இவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த மற்றொரு மாணவர் வீட்டிற்குச் சென்று தனது தந்தைக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவன் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஆஜரானதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து இந்த தேர்வை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்த கேம்பிரிட்ஜ் தேர்வுகளுக்கான கல்வி நிறுவனம்  உத்தரவிட்டுள்ளது.

இதனால் குறித்த பரீட்சைக்கு இலட்சக்கணக்கில் பணத்தை செலவிட்ட  ஏனைய பெற்றோரும், மாணவர்களும் பெரும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டதுடன், இவர்களுடைய பரீட்சை குறித்து பலத்த கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.