கொரோனா நோய் தொற்று காரணமாக நேற்று தமிழ் சினிமாவின் இரண்டு பிரபலங்களின் மரண செய்தி வந்தது.
பாடகர் கோமகன் மற்றும் குணசித்திர நடிகர் பாண்டு இருவரும் கொரோனாவால் காலமானார்கள். இப்போது பிரபல நடிகையின் மரண செய்தி வந்துள்ளது.
ஹிந்தி மற்றும் போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீபதா.
பழம்பெறும் நடிகர்களான தர்மேந்திரா, கோவிந்தா, ராஜ் பாப்பர் போன்ற நடிகர்களுக்கு நடித்துள்ள ஸ்ரீபதா கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்போது இறந்துள்ளார். அவரது மரண செய்தி ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.