ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்..

இயல்பாக ஒரு கருவில் இரண்டு குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் உருவாகுவது வாடிக்கையான ஒன்றாகும். பெரும்பாலும் இரண்டு குழந்தைகள் ஒரு கருவில் உருவாகும் நிலையில், சில நேரம் நான்கு குழந்தைகள் ஒரே கருவில் உருவாகும்.

இரண்டு குழந்தைகளை தாண்டி உருவாகும் கருக்கள் பெரும்பாலும் உயிர் பிழைப்பதில்லை. சில நேரங்களில் அதிசயமாக அக்குழந்தைகள் பிறப்பார்கள். இந்நிலையில், ஆப்ரிக்காவில் ஒரே கருவில் 9 குழந்தைகள் உருவாகி, 9 குழந்தைகளையும் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.

ஆப்ரிக்காவில் உள்ள மாலியை சார்ந்த பெண்மணி கருவுற்று இருந்த நிலையில், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதன்போது, மருத்துவ பரிசோதனையில் மருத்துவர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக 7 குழந்தைகள் கருவில் உருவாகி இருப்பது தெரியவந்தது.

ஹலீமா சீஸ் என்ற 25 வயது பெண்ணிற்கு 7 கருக்கள் உண்டாகியுள்ளதை அறிந்த மருத்துவர்கள், அவரை ஆரோக்கியமாக கவனிப்பதில் முக்கியத்துவம் அளித்தனர். மேலும், குழந்தைகள் ஆரோக்கியத்துடன் பிறக்கவும் மொரோக்கோவிற்கு அழைத்து சென்று அரசு அனுமதியுடன் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பெண்மணிக்கு அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் நடைபெற்ற நிலையில், மீண்டும் பேரின்ப அதிர்ச்சியாக 9 குழந்தைகளை பத்திரமாக பிரசவிக்க வைத்துள்ளனர். 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தமாக 9 குழந்தைகள் பிறந்துள்ளார்.