யாழில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ் நகர பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,வீதிகளில் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது யாழ். நகர்ப்பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு எச்சரிக்கை..

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை இடத்பெற்றது.

யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார், யாழ். மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, யாழ். பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் விழிப்புணர்வை மேற்கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்துத் தரிப்பிடம், முச்சக்கரவண்டித் தரிப்பிடம் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, முகக்கவசம் அணியாதவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.