நாட்டில் நடந்து வரும் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொரோனாத் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நல்ல நடவடிக்கையையும் தாம் ஆதரிக்கப்போவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.







