தலைவி சமந்தாவின் பிறந்த நாள் ஸ்பெஷல்.! கொள்ளையழகு புகைப்படம்.!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2011ஆம் ஆண்டு அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

சென்னை பெண்ணான சமந்தா திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செட்டிலாகிவிட்டார். இவர்கள் இருவரும் விண்ணை தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் காதலித்தது குறிப்பிடத்தக்கது..
இத்தகைய சூழலில், நடிகை சமந்தா தற்போது வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்கி இருக்கிறார். அதிலும், நெகட்டிவ் ரோலில் அவர் நடித்து இருக்கிறார் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் தரும் விதமாக அமைந்தது.

நடிகை சமந்தாவின் புகழை அதிகப்படுத்தும் விதமாக டுவிட்டரில் அந்த சீரியஸ் காண எமோஜி வெளியிடப்பட்டது., மிகவும் வைரலானது.

எப்பொழுதும் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பது வழக்கம். இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் கேக் வெட்டிய கொள்ளையழகு புகைப்படம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.