திருகோணமலை பாடசாலைகளுக்கு பூட்டு!

கொரோனா அச்சம் காரணமாக திருகோணமலை மாவட்ட கல்வி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மூன்று பாடசாலைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

அதன்படி மஹஓயா கல்வி வலயத்தைச் சேர்ந்த ஹரஸ்கல வித்தியாலயத்தில் சில மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்தப்பாடசாலை மூடப்பட்டுள்ளது.

திருகோணமலை அபயபுர வித்தியாலயத்தின் அதிபருக்கு தொற்று ஏற்பட்டதால் அந்தப் பாடசாலையும் இழுத்து மூடப்பட்டிருக்கிறது.

மேலும் சீனத்துறைமுக தமிழ் வித்தியாலயத்திலும் பதில் அதிபருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், அந்தப் பாடசாலையும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.