நடிகர் விவேக்கின் மறைவு, சோகத்தில் நடிகர் ரஜினிகாந்த் போட்ட பதிவு

சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் அவர்கள் இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அவரது இந்த பிரிவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் நம்மை சிரிக்க வைப்பார் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் இன்று காலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் வந்தது அவரது மரண செய்தி.

காலை முதல் பிரபலங்கள், மக்கள் என தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்னுடைய நண்பர் விவேக் அவர்களின் மரணம் அதிர்ச்சியடைய வைக்கிறது.

சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது என வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.