முதல் வார முடிவில் தனுஷின் கர்ணன் எவ்வளவு வசூல் தெரியுமா??

சமூகத்தில் நடக்கும் ஒரு பெரிய பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம் கர்ணன்.

பரியேறும் பெருமாள் என்கிற படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இப்படத்தை தனுஷை வைத்து இயக்கியுள்ளார்.

படத்தில் தனுஷின் நடிப்பிற்கு பெரிய பாராட்டுக்கள் வந்துகொண்டிருக்கின்றன, அதேசமயம் மாரி செல்வராஜ் கதைக்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

50% கூட்டத்தோடு படம் திரையாகி வருகிறது. படமும் முதல் வார முடிவில் இதுவரை ரூ. 2.98 கோடி வசூலித்துள்ளதாம்.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் இருப்பதால் படத்தின் வசூல் வரும் நாட்களில் மிகவும் அதிகமாகும் என்கின்றனர்.