தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் விவேக் திடீரென அனுமதி..!!

சினிமாவில் எல்லாராலும் மக்களை சிரிக்க வைத்துவிட முடியாது.

ஆனால் சாதாரணமாக காமெடி செய்யாமல் அதில் ஒரு கருத்தை வைத்து காமெடி செய்து மக்களுக்கு விழப்புணர்வும் ஏற்படுத்தி வந்தவர் நடிகர் விவேக்.

நேற்று தான் இவர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அனைவரையும் நோயில் இருந்து காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.