சாதனை புரிந்த தமிழ் இளைஞன்..!!

திருகோணமலை நகரில் இருந்து இம்முறை இலங்கை நிர்வாக சேவை (SLAS) போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று நேர்முகப் பரீட்சைக்கு தெரிவாகி சாதனை புரிந்த உதயக்குமரன் குமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது,

நிலாவெளியின் விவசாயியின் மகனான இவர் தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரியிலும் உயர் கல்வியை திருகோணமலை உவர் மலை விவேகானந்தா கல்லூரியிலும் கல்வி கற்று அதன் பின்னர் அவரது முகாமைத்துவ பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் திருகோணமலை செல்வநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் தற்போது ஆசிரியராக பணி புரிந்து வருகின்ற நிலையில் இலங்கை நிர்வாக சேவை SLAS போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றிருக்கிறார்.

இவர் கடந்த முறையும் SLAS போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று எதிர்பாராதவிதமாக நேர்முகத் தேர்வில் தவற விட்டிருந்தார். இம்முறையும் இவரது கடின முயற்சியால் சாதனை புரிந்துள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை தமிழ் மொழிப்பரீட்சார்த்திகள் குறைவாக சித்தி பெற்றிருக்கிற நிலையில் இவருடைய தெரிவு எமக்கும் எமது மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கின்றது.

அத்துடன் இவர் இம்முறை நேர்முகத் தேர்வில் சித்தி பெற்று எமது மாவட்டத்துக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும் என்பது எம் அனைவரினதும் விருப்பமாகும்.