வெளிநாடுகளில் வசூலை அள்ளும் கர்ணன் திரைப்படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் கர்ணன், இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படம் வெளியான முதல் நாளிலே ரூ.10.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, இதனால் இப்படம் நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் வெளியான முதல் நாளிலே அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி கர்ணன் திரைப்படம் குறித்து தினம்தோறும் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் இப்படத்தை புகழ்ந்து இணையதளத்தில் பதிவிட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போது கர்ணன் திரைப்படம் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

* ஆஸ்திரேலியா – A$123,402 [ 70 லட்சம் ]

* நியூஸிலாந்து – NZ$15,287 [ 8 லட்சம் ]