நீராட சென்ற இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!

2திருகோணமலையில் தொடர்ந்தும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருகோணமலை-மாவிலாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுகிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பேராதனை – முர்தலாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், சேருநுவர காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.