விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சுனிதா.
இதன்பின் விஜய் டிவியில் வந்த பல நிகழ்ச்சிகளில் நடமாடி இருக்கிறார். ஆனால் பெரிதும் மக்கள் மத்தியில் இவர் பிரபலமாகவில்லை.
ஆனால் தற்போது சின்னத்திரையில் பெரிதும் கொண்டாடப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தேடித்தந்தது.
ஆம் குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக கலந்துகொண்ட சுனிதா, தனது நகைச்சுவைகளை சிறந்த கன்டென்ட்டாக மாற்றினார்.
சமீபத்தில் விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுனிதா, தன்னை கடந்த 10 வருடமாக தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் என்ன அவர்கள் வீடு பெண்ணாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என கண்கலங்கி கதறி அழுதார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் அழுததை பார்த்த ரசிகர்கள் பலரும், அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.







