பள்ளிப்பருவத்தில் பாவாடை சட்டையில் கலக்கிய மஞ்சு வாரியர்.!

மலையாள திரையில் நிறைய திரைப்படங்களில் நடித்து மிகவும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர். கடந்த 2019ம் ஆண்டு இவர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இந்த படம் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும். இதில் மஞ்சு வாரியார் தனுஷின் மனைவியாக நடித்thu இருப்பார். மஞ்சு வாரியரின் எதார்த்தமான நடிப்பை கண்டு பலரும் ஆச்சர்யம் கொண்டனர்.

தற்போது நடிகை மஞ்சு வாரியர் கைவசம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் மற்றும் மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியின் படவெட்டு ஆகிய படங்கள் இருக்கின்றன.தமிழ் மலையாளம் என இரண்டிலும் ரெக்கை கட்டி பறக்கும் மஞ்சு வாரியார் தற்போது இந்தி பக்கம் திரும்பியுள்ளார்.

அதாவது கல்பேஷ் இயக்கும் அமெரிக்கி பண்டிட் எனும் பாலிவுட் திரைப்படத்தில், நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். போபாலில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. நடிகை மஞ்சு வாரியாரின் குட்டைப்பாவாடை புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Manju Warrier (@manju.warrier)