தமிழில் ரஜினி நடித்த குருசிஷ்யன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. அதன்பிறகு தமிழில் கௌதமி ஏகப்பட்ட படங்கள் நடித்தார்.
கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படம் நடிக்கும் போது இருவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.
கௌதமி 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 1999ம் ஆண்டே பிரிந்தனர்.
இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.
தற்போது நடிகை கௌதமியின் முதல் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதில் மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா அவர்கள் உள்ளார்.







