தொலைக்காட்சி தொடர்களை தாண்டி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பெரியளவில் வெற்றியை காண்கிறது. அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய ஹிட் கொடுத்து பலரிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குக் வித் கோமாள்.
கடந்த இரு சீசன்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பெரியளவில் புகழ் பெற்று பிரபலமானவர் புகழ். தற்போது அஷ்வின், ஷகிலா, பாபா பாஸ்கர், கனி உள்ளிட்ட போட்டியாளர்களும் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, சரத் உள்ளிட்ட கோமாளிகளும் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் அறையில் கோமாளிகளுக்கு ஹிண்ட்ஸ் கொடுக்கும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது கோமாளி புகழ் உள்ளே வந்ததும் பிக்பாஸ் வாய்ஸ்சில் பேசிய குரலில் புகழ் உங்கள பார்த்தால் ஆன்களுக்கே காதல் வரும் என சர்ச்சையாக பேசியுள்ளார்.
தற்போது அது இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் தொலைக்காட்சி அந்த சர்ச்சையாக பேசிய காட்சியை உடனே நீக்கிவிட்டது. ஆனால் அந்த குறிப்பிட்ட காட்சியை ஹாட் ஸ்டாரில் நிக்கப்படவில்லையாம்.