பொது இடத்தில் மக்களோடு மக்களாக நடந்துவந்த நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் என்பதை தாண்டி இனி அரசியல்வாதி என்று தான் கூற வேண்டும். கலையை தாண்டி இப்போது அவர் மக்கள் பணியில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

தேர்தல் வர இருப்பதால் அதற்கான வேலையில் கமல்ஹாசன் அவர்கள் மும்முரமாக உள்ளார். இன்று அவரது ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தையே கலக்கி வருகிறது.

அதாவது அவர் கோவையில் இன்று காலை மக்களோடு மக்களாக நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை சற்றும் எதிர்ப்பார்க்காத மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் டுவிட்டரில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.