விஜய் சேதுபதி, நடிப்பின் நாயகன் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். அவர் நடிப்பில் அடுத்து லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
இந்த நேரத்தில் தான் லாபம் பட இயக்குனர் எஸ்பி. ஜனநாதன் அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து விஜய் சேதுபதி மிகவும் நொந்துபோனார்.
தற்போது விஜய் சேதுபதி குறித்து ஒரு புதிய தகவல் வந்துள்ளது. அதாவது சன் தொலைக்காட்சியில் புதிய சமையல் நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளதாம்.
அதன் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை தகவல் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர் அந்நிகழ்ச்சிக்கு ஒரு ஸ்பெஷல் நடுவராக வரலாம் என்கின்றனர்.







