தல அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித். எச். வினோத் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படம் வலிமை.

இவர் நடித்து பல திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. ஆனால் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாத படம் என்றால் அதில் மங்காத்தா படம் கண்டிப்பாக இடம்பெறும்.

இந்நிலையில் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இதில் ” வரும் மே 1 தல அஜித்தின் 50வது பிறந்தநாள், அந்த நாளில் அவரது 50வது திரைப்படமான மங்காத்தாவை, உங்களின் செல்வாக்கை வைத்து ரீ ரிலீஸ் செய்தால் சூப்பராக இருக்கும் ” என்று கேட்டுள்ளார்.

இது மட்டும் நடந்தால், திரையரங்களில் தல அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கும். சமீபத்தில் அஜித் நடிப்பில் ஏற்கனவே வெற்றிபெற்ற, பில்லா படம் ரீ ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.