பிரபல பாலிவுட் நடிகையை கோடிகளில் விலைக்கு பேசிய சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி?

சினிமா பிரபலங்கள் படங்களை தாண்டி தற்போது விளம்பரங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்தவகையில் நடிகை சினேகா முதல் ஹன்சிகா, தமன்னா வரை அனைவரை தன் கடை விளம்பரத்தில் நடிக்க வைத்தவர் லிஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள்.

தன்னுடைய கடையை தாண்டி விளம்பரங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அருள். தற்போது படத்தில் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று 200 கொடி பட்ஜெட்டி படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 2019ல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

நடிகர் அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி- ஜெர்ரி இயக்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இரு நடிகைகளின் கதாபாத்திரம் அமைவதால் மிஸ் இந்தியா பட்டம் வென்ற கீத்திகா திவாரி முத ஹீரோயினாக கமிட்டாகினார். தற்போது இரண்டாம் நடிகையாக பாலிவுட் க்ளாமர் நடிகை ஊர்வசி ராவ்டேலா கமிட்டாகியுள்ளார்.

அவருக்கு இப்படத்தில் கோடிகளில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்து பரவி வருகிறது. மேலும் ஊர்வசிக்கு தமிழில் இதுதான் முதல் படமாக இருக்கபோகிறது.