சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த ஷிவானி தமிழில் பகல் நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து, கடை குட்டி சிங்கம் என்ற தொடரிலும் நடித்தார். தற்போது, அவர் இரட்டை ரோஜா என்ற சீரியலில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார்.
அத்துடன் சமீபத்தில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ வீடியோ டான்ஸ் என்று பலவற்றையும் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சரியாக கேம் விளையாட வில்லை என்று பலராலும் விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டார். தொடர்ந்து, தற்போது கவர்ச்சி போட்டோசூட்டிற்கு திரும்பியிருக்கிறார். இத்தகைய சூழலில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பதரவைத்துள்ளது.
View this post on Instagram







