பிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா……

கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாக்களில் மிகவும் பிரபல வில்லன் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்குக் தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

தமிழில் தில் திரைப்படத்தில் வெட்டு சங்கராக நடித்து பிரபலமானவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. தில் படத்திற்கு பிறகு பல படங்களில் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார்.

இவர் விஜயுடன் கிள்ளி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பர். அதில் விஜய்க்கு இவர் தந்தை. இறுதியாக அனேகன் படத்தில் நடித்து இருந்தார் . பின்னர் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘இந்த பாஸிட்டிவ் (கொரோனா) நான் விரும்பாத ஒன்று. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இப்போது எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. விரைவில் குணமாகி வருவேன் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.