சின்னத்திரையில் மீண்டும் தேவயானி..

80ஸ் காலம் முதல் 90ஸ் காலம் வரையில் தனது அடக்க ஒடுக்கமான அழகு மற்றும் நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை கொண்டவர் நடிகை தேவயானி. அப்போதைய முன்னணி நடிகர்களான கமல், அஜித் ,விஜய் மற்றும் விக்ரம் போன்ற அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார்

இவரது கதாபாத்திரங்கள் கொஞ்சம் கூட முகம் சுளிக்காத வண்ணம் நடிப்பார் மேலும் குடும்பப்பாங்கான நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் பெற்றுள்ளார் தேவயானி. சினிமாவில் எந்த அளவிற்கு பிரபலமானரோ அதே அளவிற்கு சின்னத்திரையையும் விட்டு வைக்கவில்லை.

சன் டிவியில் கடந்த 2003 முதல் 2009ஆம் ஆண்டு தேவயானி நடிப்பில் ஒளிபரப்பான மெகா தொடர் கோலங்கள். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கியிருந்தார். 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான சீரியல்களில் கோலங்களும் ஒன்று

இந்நிலையில் தற்போது தேவயானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார் புதிய சீரியல் ஆன புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியல் இன் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது