ஆஸ்கரை வெல்லப்போகும் சூரரை போற்று.?!

இறுதி சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான படம் சூரரை போற்று. குறைந்த விலையில் ஏரோ பிளேன் டிக்கெட் என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் உழைக்கும் இளைஞர்கள் பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும்.

இதில் மாறன் என்ற கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடித்து இருப்பார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார்.

ஆஸ்கர் பரிந்துரைக்கான ரிலீஸில் சூரரைப்போற்று திரைப்படம் தேர்வாகி இருக்கின்றது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், ஒரிஜினல் ஸ்கோர் பிரிவுகளில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றது.


அயல் நாட்டு திரைப்படங்களை தேர்ந்தெடுக்கின்ற பிரிவில் திரையிட இந்த படம் தேர்வாகி இருக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரம் திரைப்படங்கள் பொதுப்பிரிவில் போட்டியிட குவிந்தது. தற்போது, ஆஸ்கர் குழுவினர் அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு இறுதிப் பட்டியலை தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.

366 திரைப்படங்கள் பங்கேற்ற இந்த பட்டியலில் சூரரைப்போற்று திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம் ,சிறந்த நடிகை, சிறந்த நடிகர் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சூரரைப்போற்று திரைப்படம் இடம் பிடித்துள்ளது. இதை அறிந்த படக்குழுவினரும், ரசிகர்களுக்கும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

வாக்கு பதிவின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியலை ஆஸ்கர் குழுவினர் வெளியிடுவார்கள். மார்ச் 5 முதல் 10-ஆம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடைபெறும். பின்னர் 15ஆம் தேதி பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்படும். தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற இருக்கிறது.