சூரரை போற்று படத்தை முந்திய ஜகமே தந்திரம்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் டீசர் உடன் நேரடியாக Netfilx-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Netfilx இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், Netfilx ஜகமே தந்திரம் படத்தை ரூ.55 கோடி ($7.5 மில்லியன்) கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை நேரடியாக OTT யில் வெளியான திரைப்படங்களில் இப்படத்தை தான் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.