தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர்.
அதனை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக வழிமாறி வந்து பின்னர் அங்கிருந்த ரசிகர்களுடன் செல்பாய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் தல அஜித் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது அவரின் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.







