கணவரின் முன்னாள் மனைவி முன் 2ஆம் திருமணம் செய்த கௌதம் மேனன் பட நடிகை..

தமிழ் சினிமாவில் காதல் காவியன் என்ற பெயரை கொடுத்து வெளியான படங்கள் பல இருக்கிறது. அதிலும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் மின்னலே. 2001ல் இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென் நடிப்பில் வெளியாகியது.

தமிழில் பெரிய வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்ற இப்படத்தில் இந்தி ரீமேக்கில் மாதவனையே நடிக்க வைத்துள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன். அதில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்ஸா நடித்திருந்தார்.

இந்தியிலும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தையும் கவர்ந்தும் வந்தது. மாடலிங் துறையில் இருந்து நடிகையாக அறிமுகமாகி பிரபலமாகினார் தியா.

பல படங்களில் நடித்து வந்த தியா 2014ல் சஹில் சங்கா என்பவரை திருமணம் செய்தார் இதையடுத்து 5 வருடங்களாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் 2019ல் விவாகரத்து பெற்றார்.

40 வயதான தியா சமீபத்தில், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான வைபவ் ராக்கி என்ற தொழிலதிபரை எளிய முறையில் திருமணம் செய்துள்ளார். கொரானா வைரஸ் காரணமாக பிரம்மாண்டம் இல்லாமல் குடும்பத்தினர் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

தியா திருமணம் செய்து கொண்ட வைபவ்வின் முன்னாள் மனைவி சுனைனாவும் திருமணத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.