சர்ச்சையில் சிக்கிய குக்கு வித் கோமாளி சிவாங்கி?

சின்னத்திரை டிவி மூலம் பிரபலமான சிவாங்கி பாடகியாக மக்கள் மனதில் பதிந்தாலும் அவர் இப்போதெல்லாம் காமெடி பிரபலமாக இடம் பிடித்துவிட்டார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி அவரை அப்படி மாற்றிவிட்டது எனலாம்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 1 ல் போட்டியாளராக பங்கேற்றதை தொடர்ந்து தற்போது சீசன் 2 கோமாளியாக பங்கேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியால் அவருக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

தற்போது சிவாங்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவரின் எதிர்ப்பாளர்கள் ஒன்று கூடி #GoBackModi​ என டிவிட்டரில் ட்ரெண்ட் செய்வர்.

அதே நேரத்தில் அவரின் ஆதரவாளர்கள் #TNWelcomesModi என அதற்கு போட்டியாக வரவேற்பும் தெரிவிப்பர்.

இம்முறையும் தமிழகம் வந்துள்ள மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi​ என பலரும் பதிவிட சிவாங்கியும் அதை பதிவிட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

இவ்விசயம் பெரிதாக கடைசியில் அது சிவாங்கியின் பெயரில் போலியான ஐடியில் இருந்து வேறு யாரோ பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.