போடு வெடிய! விஜய் 66 படம் குறித்து வெளியான முக்கிய செய்தி!

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் அடுத்ததாக நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அவ்வகையில் தற்போது விஜய்யின் 66 வது படத்தை மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.

இந்த அணியில் இயக்குனர் லோகேஷ், அட்லீ, அஜய் ஞானமுத்து, ஹெச்.வினோத் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. கதையை பொறுத்து பட்ஜெட் அமையவுள்ளதாம்.