முக்கிய அரசியல் கட்சியில் இணைந்த நடிகரின் குடும்பத்தார்!

நடிகர் திலகர் சிவாஜி கணேசன் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது அரசியிலும் ஈடுபட்டார். தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு சென்றார். ஆனால் அவருக்கு அது கைகொடுக்கவில்லை. பின் அரசியலில் இருந்து விலகினார்.

அவரின் வாரிசுகளான நடிகர் ராம் குமார் மற்றும் நடிகர் பிரபு இருவருமே சினிமாவில் இருந்தவர்கள். பட தயாரிப்பும் செய்து வந்தனர்.

தற்போது இவர்கள் இருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனராம். ராம் குமாரின் மகன் துஷ்யந்தும் கட்சியில் இணைந்திருக்கிறாராம்.

பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டதால் அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்தார்களாம்.