மாநாடு டீசர் இந்த சூப்பர் ஹிட் ஹாலிவுட் படத்தின் காப்பியா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்து உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

இதில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜெ.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் என பலரும் நடித்து வருகின்றனர்.

இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் மாநாடு திரைப்படத்தின் டீசர் வெளியானது.

இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் இணையத்தில், மாநாடு திரைப்படம் கிறிஸ்ட்பர் நோலன் இயக்கிய டெனெட் திரைப்படம் போலவே இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த டீசரின் கீழ் இந்த டீசர் Rewind என படக்குழு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.