படு மோசமாய் பதில் கொடுத்த நீலிமா ராணி.!

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நீலிமா ராணி. இவர் தமிழ் சினிமாவில் கஜினிகாந்த், தேவர்மகன், பாண்டவர்பூமி என பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார்.

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை உள்ளிட்ட சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறார். மேலும், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் நாயகியாகவும், வில்லியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், அவர் தனது இணைய தள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் அனைத்து நாயகிகளும் தவறாமல் செய்யும் ஒரு விஷயம் என்றால் அது சோசியல் மீடியாக்கள் ஆக்டிவ்-ஆக இருப்பதுதான்.

இத்தகைய சூழலில், இவருடைய இன்ஸ்டாகிராமில் நெட்டிசன் ஒருவர் மிகவும் கேவலமாக ஒரு நைட்டுக்கு எவ்வளவு கேட்க அதை ஸ்க்ரீனஸோட் எடுத்த நீலிமா சகோதரா உங்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கிறேன். இன்னொருவரை தரக்குறைவாக பேசுவது மிகவும் வக்கிரமான மனநிலை. உங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. உடனே மனநல மருத்துவரை பாருங்கள் என்று பதிலடி கொடுத்து இருக்கின்றார்.