புது படத்தில் பிரபு தேவாவுடன் கைகோர்க்கும் ரம்யா….

கோலிவுட்டில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா நம்பீசன். இதைத்தொடர்ந்து, அவர் பீட்சா திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகினார். அவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது.

சமீபத்தில் பிக்பாஸ் ரியோ ராஜுக்கு ஜோடியாக பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். விரைவில் இது திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்பொழுதும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்யா நம்பீசன் இவர் தனது ட்விட்டர் பக்கங்களில் மிகவும் அழகான க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருவார்.

இத்தகைய சூழலில் இயக்குனர் ராகவன் இயக்கி பிரபுதேவா நடிக்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதல் கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், இன்று படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.