தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிக புதுமுக நடிகைகள் வந்தார்கள். அதில் ஒருவர் தான் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மியா.
இப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியுடன் வெள்ளையானை என்கிற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவருக்கு சனூப் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்று காலை இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்தது.
திருமண புகைப்படங்கள் வெளியாக அதில் ஆளே அப்படியே மாறியுள்ளார், ரசிகர்களும் மாறிவிட்டாரே என்று கூறி கமெண்ட் செய்து வாழ்த்தும் கூறி வருகின்றனர்.








