இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன்பின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
சமீபத்தில் இவரது தந்தை மரியநேசன் அவரக்ளின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா திரையுலகில் கவனம் செலுத்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4ன் இறுதி பார்ட்டியில் கூட கலந்து கொண்டார் லாஸ்லியா.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் துளியும் மேக்கப் போடாமல் அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..








