கேஜிஎஃப் இயக்குநர் நீலுடன் இணையும் பிரபாஸ்!

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும் திரைப்படம் பூஜையுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.

பிரபாஸ் – பிரஷாந்த் நீல் இணையும் படத்துக்கு சலார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹாம்பேல் தயாரிக்கும் இந்தப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பாகுபலி 2 சாஹோ படங்களுக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.