தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் பிரபலமாவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்தவகையில் மாஸ்டர் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் முன்பே பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.
மாஸ்டர் கதாபாத்திரம் என்ன என்று தெரியாமல் ரசிகர்களை ஈர்த்ததற்கு ஒரு காரணம் அவர் சமுகவலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் தான். அந்த அளவிற்கு க்ளாமரில் அள்ளிக்கொடுத்து வருகிறார்.
மாஸ்டர் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து வரும் நடிகை மாளவிகா, சமீபத்திய பேட்டி ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பயங்கரமாக கலாய்த்துள்ளது நயன்தாரா ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதற்கு காரணம், சினிமாவில் நீங்க பார்த்த நகைச்சுவை காட்சிகளில் எது சிறந்த நகைச்சுவை காட்சி என மாளவிகா மோகனனிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த மாளவிகா, பிரபல நடிகை ஒருவர் சென்டிமெண்ட் காட்சியில் முகம் முழுக்க மேக்கப் போட்டுக் கொண்டு நடித்ததுதான் தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத காமெடி காட்சி என மாளவிகா மோகனன் குறிப்பிட்டுள்ளார். மாளவிகா மோகனன் கூறியது அட்லி இயக்கத்தில் வந்த ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த காட்சி தான் எனவும் கிளப்பி விட்டு விட்டனர்.
இதனைக் கேட்டு டென்ஷனான நயன்தாரா ரசிகர்கள் தற்போது இணையதளங்களில் மாஸ்டர் படத்தில் ஊறுகாய் அளவுக்குக்கூட உங்கள் கதாபாத்திரம் இல்லை எதற்கு இவ்வளவு சீன் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.







